குருகூர்

இன்று ஆழ்வார் திருநகரி சுட்டப்படும் தலம். திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. நம்மாழ்வார் பிறந்த இடம். எனவே ஆழ்வார் திருநகரி எனப் பெயர் பெற்றது. நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் இவரது பாடல் இங்குள்ள திருமால் பற்றி அமைகிறது. பாண்டிய நாட்டில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஒன்பது திருமால் கோயில்களில் ஒன்று இக்கோயில். குருகு என்னும் சொல் தமிழில் நாரை கோழி குருக்கத்தி என்பனவற்றைக் குறிக்கும். இங்கே குருகு என்று பெயர் கொண்ட பட்சியின் பெயரால் விளங்கும் ஸ்தலமாகக் கொள்வது ஏற்புடைத்து என்ற எண்ணம் பொருத்தமானது. குருகன் என்ற அரசன் ஆட்சி புரிந்த ஸ்தலம் என்ற குருபரம்பரை வரலாறும் உண்டு.