குராப்பள்ளி

குராப்பள்ளியில்‌ துஞ்சியதால்‌ சோழன்‌ பெருந்திருமாவளவன்‌ குராப்பள்ளித்‌ துஞ்சிய சோழன்‌ பெருந்திருமாவளவன்‌ எனப்‌ பெயர்‌ பெற்றான்‌. குராப்பள்ளியைப்‌ பற்றிய வேறு செய்திகள்‌ ஒன்றும்‌ தெரியவில்லை. புறநானூறு 58, 60 197ஆம்‌ பாடல்கள்‌ குராப்பள்ளியில்‌ துஞ்சிய மன்னனைப்‌ பற்றிப்‌ பாடியவை. குராப்பள்ளி என்பது குராமரங்கள்‌ அடர்ந்த பகுதியால்‌ பெற்ற ஊரர்ப்பெயராக இருக்கலாம்‌.