வட வடகுரங்காடு துறை, தென் குரங்காடு துறை என்ற இரு தலம் பற்றிய பாடல்கள் அமைகின்றன. இன்று தஞ்சை மாவட்டத்தில் காணப்படும் இரு தலங்களும் முறையே குரங்காடு துறை, ஆடுதுறை என இரண்டு பெயர்களால் சுட்டப்படுகின் றன. காவிரியின் தென்கரையில் உள்ளது தென் குரங்காடு துறை. வடகரையில் உள்ளது — குரங்காடு துறை. எனவே குரங்காடு துறை என்பதே இரண்டு ஊர்களுக்குமுரிய முதல் பெயர். பின்னர் தனிப்படுத்தப்பட தென் இணைக்கப்பட்டன என்பது தெளிவு. குரங்குகளின் மிகுதி காரணமாகவே குரங்காடுதுறை என்ற பெயர் அமைந்தது. எனினும் வாலி, போன்றவர்களால் பூசிக்கப்பட்ட தலம் என்ற எண்ணத்தை ஞானசம்பந்தரின் பாடல் தருகிறது. எனவே அவர் காலத்திலேயே இப்புராணக் கதை மக்களிடையே செல்வாக்கு பெற்று, உண்மைக் காரணம் மறைந்துவிட்டது என்பது தெளிகிறது. வட அடைகள் மேலும் இவ்வூரும் மிகச் செழிப்பும், சோலைகளும் சூழ்ந்த ஊராகக் காட்டப்படும் நிலையும் குரங்காடு துறை என்ற பெயருக்குப் பொருத்தமாக அமைகிறது.
கோங்கமே குரவமே கொழுமலர்ப்புன்னையே கொகுடி முல்லை
வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை யடை குரங்காடு துறை
வீங்கு நீர்ச் சடைமுடி யடிகளரிடமென விரும்பினாரே திருஞான – 349-1
கரையார்ந்திழி காவிரிகோலக் கரை மேல்
குரையார் பொழில் சூழ் குரங்காடு துறையே திருஞான-171-8