குரக்குக்கா

இன்றும் குரக்குக்கா என்றே சுட்டப்படும் இவ்வூர். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. காவிரியின் கரையில் உள்ள தலம் இது என்பதனை அப்பர் பாடல்கள் (பதி 189) சுட்டுகின்றன.
மிக்கனைத்துத் திசையு மருவிகள்
புக்குக் காவிரி போந்த புனற்கரைக்
கொக்கிளம்பயில் சோலைக் குரக்குக்கா
நக்கனை நவில்வார் வினை நாசமே என்ற நிலையில் அமைகின்றன. மேலும் கோல மஞ்ஞைகளா லும் குரக்குக்கா எனப் பல வளம் பற்றியும் சோலை பற்றியும் பேசும் நிலையில் குரங்குகளின் மிகுதி காரணமாக அமைந்த பெயர் இது என்பது தெளிவாகிறது. அனுமார் பூசித்த தலம் என்பது புராண எண்ணம்.