வெண்டளை மிக்க எழுசீரடி யிரண்டால் பெரும்பான்மை அமையும் பாடல்கள்;ஏழாம்சீர் விளங்காய் ஆதல் பெரும் பான்மை. அடியெதுகையும், அடிதோறும்முதலாம் ஐந்தாம் சீர்களில் மோனையும் காணப்படும்.சித்தர் பாடல்களில் காணப்படும் புது யாப்பு வகைகளுள் ஒன்று.(இலக்கணத். முன். பக்.101)எ-டு :அ) பெரிய திருமொழி 2 – 9 – 1‘சொல்லுவன் சொற்பொருள்’ஆ) திருவாசகம் – அன்னைப்பத்து.