குன்றம் என்பதும் குன்று என்பதும் மலை என்னும் பொருளையுடையனவே. குன்றம் என்ற சொல் வேங்கடமலையைக் குறிக்கவும் ஆளப் பட்டிருக்கிறது சங்க இலக்கியத்தில். வேங்கடமலை புல்லி என்ப வனுக்கு உரியதாக இருந்தது. பரிபாடலில் 9, 18 ஆகிய பாடல்களைப் பாடிய பூதனார் என்ற புலவர் குன்றத்தைச் சேர்ந்தவராதலின் குன்றம் பூதனார் எனப் பெயர் பெற்றார்.
“புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து
நடையருங் கானம் விலங்கி, கோன் சிலைத்
தொடை அமைபகழித் துவன்று நிலைவடுகர்,
பிழி ஆர் மூழர், கலி சிறந்து ஆர்க்கும்
மொழி பெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்,
பழிதீர் மாண் நலம் தருகுவர் மாதோ” (அகம். 295:13 18)
குன்றம், குன்று என்ற இரண்டு சொற்களும் பரங்குன்றத்தைக் குறிக்க ஆளப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் தற்கால மதுரைக்கு அருகில் உள்ளது. இவ்வூர் சங்க காலத்திலேயே முருகனின் தலமாக விளங்கி இருக்கிறது. முருகனது அறுபடை. வீடுகளுள் ஒன்று இத்தலம். இருபது நூற்றாண்டிற்கு முன் இக்குன்றம் சமணமுனிவர்கள் தங்க இருந்த எட்டுக் குன்றுகளில் ஒன்றாக இருந்தது. சமணர் தவம் புரிந்த இடங்கள் இங்கு உண்டு. பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் இவ்வூர் சிறப்புற்றிருந்தது. முஸ்லீம் ஆட்சியில் இங்கே ஒரு பள்ளி வாசல் ஏற்பட்டது. (கலைக்களஞ்சியம்)
“மாடம் மலிமறுகற் கூடற் குட வயின்
இருஞ் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக்
கள் கமழ் நெய்தல் ஊதி, எல் படக்
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர்,
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன்” (பத்துப். திருமுருகு 71 77)
“பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான் தன் பாதம்
கரம் கூப்பி கண்குளிரக் கண்டு.”.. (ஷே. டே, குனிப்பாடல் 91.2)
“தனி மழை பொழியும் தண் பரங்குன்றில்
கலி கொள் சும்மை, ஒலி கொள் ஆயம்”, (பத்துப், மதுரைக்: 263 264)
“இவ் வையை யாறு என் றமாறு என்னை? கையால்
தலை தொட்டேன், தண் பரங்குன்று”. (பரி, 6: 94 95)
“பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்”. (௸. 81,1)
“….மறப்பு அறியாது நல்கும்
சிறப்பிற்றே தண் பரங்குன்று’” (௸. 8: 45 46)
“வருபுனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள்
தண் பரங்குன்றத்து அடி. தொட்டேன் என்பாய்” (௸ ,8; 61 62)
“கேட்டுதும் பாணி; எழுதும்கிணை முருகன்
தாள் தொழு தண்பர ங்குன்று” (௸ 8:81 82
”மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
தண் பரங்குன்றம்! நினக்கு” (௸ 8: 129 130)
“மணி மழை தலைஇ யென, மா வேனில் கார் ஏற்று,
தணி மழை தலையின்று, தண்பரங்குன்று” (ஷே 9 10 11)
“வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு
ஒத்தன்று, தண்பரங்குன்று” (௸. 9; 68 69)
“பாடல் சான்று பல் புகழ் முற்றிய
கூடலொடுபரங்குன் றின் இடை”. (௸ 17: 22 23)
”சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா?
அனைய, பரங்குன்றின் அணி’” (.௸.17; 38 39)
“தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும்
அவ்வெள் அருவி அணிபரங்குன்றிற்கும்” (௸.. 17;42 43)
“நிலவரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து
புலவரை அறியாத புகழ்பூத்த கடம்பு அமர்ந்து
அருமுனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சிமன்
இருநிலத்தோரும் இயைக!” என ஈத்தறின்
தண் பரங்குன்றத்து, இயல்அணி நின்மருங்கு
சாறுகொள் துறக்கத் தவளொடு
மாறுகொள்வது போலும், மயிற் கொடி வதுவை” (௸. 19:1 7)
“நேர்வரை விரிஅறைவியல் இடத்து இழைக்கச்
சோபன நிலையது துணி பரங்குன்றத்து
மாஅல் மருகன் மாட மருங்கு” (௸. 19;65.57)
“நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப்பாலை
அரைவரை மேகலை, அணிநீர்ச்சூழி
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம் (௸. 21/13 15)
“கொழுநன் மூழ்தூங்கி, கொய்பூம்புனல் வீழ்ந்து
குழுவும் தகைவகைத்து தண் பரங்குன்று (௸. 21:44.45)
“சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும் (௸. திரட்டு 12.2)
“சூர் மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
சினம்மிகுமுருகன் தண்பரங் குன்றத்து” (அகம், 59 :10 11)