குணவாயிற்‌ கோட்டம்‌

சேரன்‌ செங்குட்டுவனின்‌ தம்பியாகிய இளங்கோ துறவறம்‌ பூண்டு அருந்தவம்புரிந்த இடம்‌ குணவாயிற்‌ கோட்டம்‌ என்பது. இது வஞ்ரிமாநகரின்‌ கிழக்குத்‌ இசையில்‌ அமைதந்திருந்தமையால்‌ ஊர்கள்‌ அமைந்திருந்த திசையால்‌ பெயர்பெற்ற குடவாயில்‌ போன்றே இவ்வூரும்‌ குணவாயில்‌ என்று பெயர்‌ பெற்றிருக்க வேண்டும்‌. இளங்கோ தவம்புரிந்த கோட்டம்‌ அமைந்திருந்த வஞ்சிமாநகரின்‌ குணவாயில்‌ பகுதி பிற்காலத்தில்‌ அப்பெயருடன்‌ ஓர்‌ ஊராயிற்று போலும்‌. “குணவாயில்‌ கோட்டம்‌” என்ற சிலப்பதிகாரப்‌ பதிகத்தின்‌ அடிக்குப்‌ பொருள்‌ எழுதிய அரும்பத உரை’யாசிரியரும்‌, அடி யார்க்கு நல்லாரும்‌ குணவாயில்‌ என்பதற்குத்‌ திருக்குண வாயில்‌ என்று கூறினர்‌. திருக்குணவாயில்‌ என்பது ஓரூர்‌ என்றும்‌, அது வஞ்சியின்‌ கீழ்த்திசையின்கண்‌ உள்ளதென்றும்‌ அடியார்க்கு நல்லார்‌ கூறினர்‌,
“குண வாயிற்‌ கோட்டத்‌ துரசுதுறந்‌ திருந்த
குடச்‌ கோச்‌ சேரலிளங்‌ கோவடிகட்கு” (சிலப்‌. பதிகம்‌. 1 2)
“குணவாயில்‌ கொங்கு நாட்டில்‌ உள்ளதென்பர்‌ சிலர்‌, (ஆராய்ச்சித்‌ தொகுதி. ப. 247) திருவஞ்சிக்குளம்‌. என வழங்கும் திருவஞ்சைக்‌ களத்தின்‌ அருகேயுள்ள தென்பர்‌ சிலர்‌. திருவஞ்சைக்‌ களம்‌ என்னும்‌ திருக்கோயிலையுடைய கொடுங்கோளூரில்‌ (Granganore) குணவாய்‌ என்ற ஊர்‌ உள்ளதென்று ‘உண்ணியாடி சரிதம்’ என்னும்‌ மலையாளக்காவியம்‌ கூறுகின்றது, இது பன்னிரண்டாம்‌. நூற்றாண்டில்‌ எழுதப்பட்டதென்பா்‌ என்ற‌ கருத்தும்‌ காணப்படுகறது.,