குணப்பெயர்ப் பகுபதம்

செய்யான், செய்யாள், செய்யார், செய்யது, செய்யன, செய்யேன்,
செய்யேம், செய்யாய், செய்யீர், – என இவ்வாறு வருவன இக்குணத்தையுடையார்
என்னும் பொருண்மைக் குணப்பெயர்ப் பகுபதமாம். (ஈண்டுச் செம்மை என்ற
குணப்பண்பின் அடியாக இப்பெயர்ப் பகுபதங்கள் பிறந்தன.) (நன். 133
மயிலை.)