குடவாயில்

இன்று குடவாசல் எனத் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது (பதி 158, 194). இன்று கும்பகோணம்-திருவாரூர் நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ளது என்ற எண்ணம் இது தொடர்பானது. குடவாயில் இன்று குடவாசல் என்று வழங்கப் படினும் சங்ககாலம் தொட்டே வழங்கிய பெயர்களாகக் குட வாயிலுடன் குடந்தைவாயில் குடந்தை என்பனவும் அமைகின்றன. திருணபிந்து முனிவர் வழிபட இறைவன் குடத்தில் இருந்து வெளிப்பட்டு அவருடைய நோயைத் தீர்த்தருளிய தலம். எனவே குடவாயில் எனப் பெயர் பெற்றது என்ற எண்ணம். அமைகிறது குடந்தை, குடந்தை வாயில், குடவாயில் என்ற ஊர்ப்பெயர் பற்றிய எண்ணங்களுடன் குடந்தை குடமூக்கு கும்பகோணம் பற்றிய எண்ணங்களையும் இணைத்து நோக்கின் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. இன்றைய குடவாயில் கும்பகோணத்தில் (குடமூக்கில்) இருந்து 10 மைல் தூரத்தில் உள்ளது ஒரு நிலை. அடுத்து இரண்டும் குடந்தை என்ற பெயர் பெறுகின்றன. சங்க இலக்கியத்தில் அமைவது குடந்தை. குடந்தை வாயில் எனவும் சுட்டப்பட்ட குடவாயில் உரையாசிரியர் அனைவரும் குடந்தை என்ற சொல்லுக்குக் குடவாயில் என்றே பொருள் கூறுகின்றார். குடமூக்கு அல்லது கும்பகோணம் என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் இல்லை. ஆயின் குடவாயிலைக் குறித்து குடந்தை என்ற பெயர் குடமூக்குக்கு உண்டு. மேலும் குடவாயில் என்பது ஒரு ஊரின் எல்லை போன்று அமைகிறது. எனவே அன்றைய நிலையில் கேர் சோழர்வண் குடந்தை வாயில் (நற் 379) என்ற எண்ணம் சோழ ரின் குடந்தைக்குரிய வாயில் என்ற நிலையில் குடந்தை ஒரு பெரிய நகரமாகவும் அதன் வாயில் சிறப்புடன் திகழ்ந்தமையின் அது குடந்தை வாயில் என்றும் குடவாயில் என்றும் அழைக்கப்பட்டு இருக்கக் கூடும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. பின்னர், குடந்தையில் தனியே சிறந்த கோயில்கள் பல தோன்ற, குடந்தை யின் ஒரு பகுதி குடமூக்கு என்று சுட்டப்பட்டு பின்னர் கும்ப கோணமாகி விட்டது என்றும், குடந்தையின் வாயிற் பகுதி குட வாயில் குடவாசலாக இன்று திகழ்கிறது எனவும் கருத இட மேற்படுகிறது. மேற்கு வாசல் பகுதி என்பது குடவாசலுக்குரிய பொருளாக அமைய, குடந்தையின் மேற்கு என்ற திசைப்பெயர் அடிப்படையில் பிறந்த ஊர் என்பது மட்டும் உறுதிப்படுகிறது. குடவாயில் என்பதற்கு வரையார் மதில் சூழ் குடவாயில் என்று சம்பந்தர் பாடும் நிலை சிறப்பாகப் பொருத்தம் காட்டுகிறது. (158-8) மேலும் தேர் வண் சோழர் குடந்தை (நற் – 379-7-9) என்று சோழரின் குடந்தையாகச் சுட்டும் நிலையிலும் கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடு தரு நிதியினும் செறிய அருங் கடிப் படுக்குவள் ; (அகம் 60-13-15) ; தண் குடவாயில் அன்னோள் (அகம் 44-17-19) போன்று குடந்தையுடன் தலைவியை உவமிக் கும் நிலையிலும் குடந்தை மிகச் சிறப்பானதொரு, பெரியதொரு நகரமாகத் திகழ்ந்திருக்கும் வாய்ப்பு அமையும் நிலையிலும், குடந்தை பெரியதொரு நகரமாகத் திகழ்ந்திருக்கும் வாய்ப்பு அமைகிறது. பின்னர் இதன் ஒரு பகுதி கோயில் சிறப்பால் குட மூக்கு என பெருமை பெற்றது என்பது பொருத்தமாகிறது.