கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்று. தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி திசைப்பெயருடன் இணைந்து குடநாடு என்னும் பெயர் பெற்றது. அந்நாட்டு மன்னன் சேரன் குடவர்கோ எனப் பெயர் பெற்றான். எருமை என்ற ஒரு மன்னன் குடநாட்டை ஆண்டுள்ளான். இவன் சேர மரபினனாக ஆகியிருக்க வேண்டும்.
“வடவர் உட்கும் வான்தோய் வெல் கொடிக்
குடவர் கோமான் நெடுஞ் சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்றமகன்” (பதிற். ஐந்தாம்பதிகம் 1 3)
“குடவர் கோவே! கொடித் தேர் அண்ணல்
வாரார் ஆயினும் இரவலர் வேண்டி
தேறின் தந்து, அவர்க்கு ஆர்பதன் நல்கும்
குகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்” (பதிற். 55;9 12)
“முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்
குடநாடு பெறினும் தவிரலர்
மடமான் நோக்கி! நின்மாண் நலம் மறத்தே” (அகம், 9116 18)
“நுண் பூண் எருமை குடகாட்டன்ன என்
ஆய்நலம் தொலையினும் தொலைக…”” (௸. 115,5 9)
“வரையா ஈகைக் குடவர் கோவே!” (புறம். 17740)
“பெரும் பெயர் ஆதி, பிணங்கு அரில் குடநாட்டு
எயினர்தந்த எய்ம்மான் எறி தசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை,
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறை” (புறம். 177:12 17),