கீழ்:புணருமாறு

கீழ் என்ற சொல் வருமொழி வன்கணம் வரின் இயல்பாகவும் மிக்கும்
புணரும்; இயல்பே வலியுடைத்து.
எ-டு : கீழ் + குலம் = கீழ்குலம், கீழ்க்குலம் (கீழாகிய குலம்
எனப் பண்புத்தொகையாதலின் அல்வழிப்புணர்ச்சி என்க.) (கிழக்கு என்னும்
திசைப்பெயரின் திரிபாகிய கீழ் வேறு: கீழ்மைப்பண்பினைக் குறிக்கும்
இந்நிலை- மொழி வேறு.) (நன். 226)
கீழ்மை என்னும் பண்பொடு வருமொழி புணர்தல் பதவியலுள் முடித்துப்
போந்தமையின், ‘கீழிருந்தும் கீழ்அல்லார் கீழ் அல்லவர்’ (குறள் 973)
என்றாற் போலக் கீழ் என்பது ஈண்டுப் பண்பாகுபெயராம். ஆகவே, கீழ்குலம்
கீழ்க்குலம், கீழ்சாதி கீழ்ச்சாதி – என்னும் இத்தொடர்கள்
இருபெயரொட்டுப் பண்புத்தொகையாம் என்க. (226 சங்கர.)
கீழ் என்பது நிலைமொழியாக வருமொழி முதலில் வன்கணம் வருமாயின்
வல்லெழுத்து மிகுதலும் மிகாமையும் என்றஇரு நிலையும் பெற்றுப்
புணரும்.
எ-டு : கீழ்க்குளம், கீழ்குளம்; கீழ்ச்சேரி, கீழ்சேரி; கீழ்த்
தோட்டம், கீழ்தோட்டம்; கீழ்ப்பாடி, கீழ்பாடி (தொ. எ. 395 நச்.)
நெடுமுதல் குறுகாது உகரம் பெற்றுக் கீழு குளம், கீழுசேரி, கீழு –
தோட்டம், கீழுபாடி – எனவும் வரும். (396 இள. உரை)