கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்திலும், தஞ்சாவூர்
மாவட்டம் நன்னிலம், மாயுரம் வட்டங்களிலும் இவ்வூர்ப்பெயர் இடம்பெற்றுள்ளதை
அறியமுடிகிறது. சுவடியில்,
“காவேரிக்கரை அருகான கிள்ளியூர்” (407-ச) என்றிருப்பதைக் காணும்போது
காவிரியாற்றின் கரையோரமாக இருக்கும் மாயுரம் வட்டத்தைச் சேர்ந்த கிள்ளியூரே
சுவடியில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஊராகும்.