கிள்ளிமங்கலம்‌

கிள்ளிமங்கலம்‌ என்ற இவ்வூர்‌ சோழ மரபினரின்‌ கிள்ளி என்ற பெயரைப்‌ பெற்று விளங்குகிறது. கிள்ளிமங்கலம்‌ என்ற இப்பெயர்‌ தற்காலத்தில்‌ கிண்ணிமங்கலம்‌ என்று வழக்கில்‌ உள்ளது. கிண்ணிமங்கலம்‌ மதுரை மாவட்டத்தில்‌ திருமங்கலம்‌ வட்டத்தில்‌ உள்ளது. கிழார்‌ என்ற புலவரும்‌, அவர்‌ மகனார்‌ சேரகோவனாரும்‌ இவ்வூரைச்‌ சேர்ந்தவர்கள்‌. ஆகவே கிள்ளிமங்கலங்‌கழார்‌ என்றும்‌, கிள்ளிமங்கலங்‌ கிழார்‌ மகனார்‌ சேரகோவனார்‌ என்றும்‌ பெயர்‌ பெற்றனர்‌. நற்றிணையில்‌ 365ஆம்‌ பாடல்‌ கிள்ளிமங்கலங்‌கழார்‌ மகனார்‌ சேரகேரவனார்‌ பாடியது. குறுந்தொகையில்‌ 76, 110, 152, 181 ஆய பாடல்கள்‌ கிள்ளிமங்கலங்கிழார்‌ பாடியவை.