வருக்கமும் நெடிலும் அனுவும் வல்லினமும் மெல்லினமும் இடையினமும்உயிரும் என இவை. (தொ. செய்.94. பேரா.)வருக்கமோனையும் வருக்க எதுகையும் வல்லின எதுகையும் மெல்லினஎதுகையும் இடையின எதுகையும் என ஐந்தாம்.கிளை எழுத்துக்கள் இவை என ஆசிரியர் எடுத்துக் கூறிற்றி லர். ஒருகhல் கூறப்பெற்ற சூத்திரங்கள் விடப்பெற்றிருத்தலும் கூடும்; ஆயினும்ஆசிரியர் இந்நூலுள் அமைத்துள்ள சூத்திரங்களிற் காணப்படுவனவற்றைநோக்கிக் கிளையெழுத் துக்களை ஓராற்றான் உய்த்துணரலாம். அம்முறையால்கொள்ளப் பெறுவன வருமாறு :அ, ஆ, ஐ, ஒள – இவை தம்முள் கிளை எழுத்துக்களாம். இ, ஈ, எ, ஏ – இவைதம்முள் கிளை எழுத்துக்களாம். உ, ஊ, ஒ, ஓ – இவை தம்முள் கிளைஎழுத்துக்களாம். இவை ஊர்ந்த மெய்களும் இம்முறையே கிளையாம்.இனி மெய்யெழுத்துக்களுள் வல்லெழுத்தாறும் தம்முள் கிளையாம்.மெல்லெழுத்தாறும் தம்முள் கிளையாம். இடையெழுத்து ஆறும் தம்முள்கிளையாம். ஞ், ந் – இவை யிரண்டும் தம்முள் கிளையாம். த், ச் -இவையிரண்டும் தம்முள் கிளையாம். ம், வ் – இவையிரண்டும் தம்முள்கிளையாம். இவை பிறப்பிட ஒற்றுமையால் கிளையாயின.(தொ. செய். 94 ச. பால.)