எதுகையும் மோனையும் ஆகிய தொடைகள் கிளையெழுத் துக்களைப் பெறும். அ ஆஐ ஒள, இ ஈ எ ஏ, உ ஊ ஒ ஓ என்னும் இவை தம்முள் கிளையெழுத்தாம். இனி மெய்யெழுத்துக்களுள், தகர சகரங்களும் – ஞகர நகரங்களும் – மகர வகரங்களும் -தம்முள் கிளையெழுத்தாம். இவை உயிர் மெய்க்கும் பொருந்தும். இனி,இனமாகிய உயிர்க்குறிலும் நெடிலும் – வல்லினப் புள்ளி ஆறும் மெல்லினப்புள்ளி ஆறும் இடையினப் புள்ளி ஆறும் – தம்முள் வருக்கம் பற்றியஎழுத்துக்களாம். (இனத்தை வருக்கத்துள் அடக்கினார் இவ்வாசிரியர்.)(தென். யாப். 51, 52)