கிளைப்பெயர்கள், ணகரம் – னகரம்- குற்றியலுகரம்- என்ற மூன்று ஈற்றன.
கிளைப்பெயராவன ஓரினத்தை உணர்த்தும் பெயர்கள். உயர்திணையில் இவை
திரிபின்றி வருமொழி யொடு புணரும்.
எ-டு : உமண்குடி, சேரி, தோட்டம், பாடி
எயின்குடி, சேரி, தோட்டம், பாடி
புரோசுகுடி, சேரி, தோட்டம், பாடி
பார்ப்பு + குழவி = பார்ப்பனக் குழவி – என அன்சாரியையும் அக்குச்
சாரியையும் பெற்றது. இது பார்ப்பினுள் குழவி – என வேற்றுமை
முடிபிற்று.
அரசு + அக்கு+ கன்னி = அரசக்கன்னி, என அக்குச்சாரியை பெற்றது. (தொ.
எ. 307, 338, 418 நச்.)
எயினக்கன்னி என னகரஈறு அக்குப் பெறுதலும், வெள்ளா ளன்+ குமரி =
வெள்ளாண்குமரி – எனவும் வேளாண்குமரி எனவும் முடிதல் போல்வனவும்
கொள்ளப்படும்.(338 நச். உரை)