சீர்காழி என்று இன்று வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. சமய வாதிகளால் மிகவும் பாராட்டப் பெற்ற தலம் இது என்பதனை, இதன் பன்னிரு பெயர் தெளிவுபடுத்தும். ஞானசம்பந்தர் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றமையும் இதன் சிறப்புக்குக் காரணம் எனலாம் (ஞானப் பால் பெற்றமை இங்குள்ள சிவன் கோயில் குளக்கரையில் தான்). இப்பன்னிரு பெயரையும் இலக்கியங்கள் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றன. காவிரியின் கழிமுகப் பகுதியில் இன்று சீர்காழி வட்டமாக’ அமைந்துள்ளது.
தார் கெழு தண்டலைத் தண்பணை தழீஇக்
கற்றெகு புரிசைக் காழி நம்பி. ஆளுடை திருக் -1
தலமல்கிய புனற் காழி – திருஞான-15-11
கடற்காழியர் கோன் – திருஞான – 5-11
கல்லுயர் மாக்கடனின்று முழங்கும்
கரை பொரு காழியமூதூர் – திருஞான 40-11
கடலார் புடைசூழ் தரு காழி – திருஞான 34-1
இவ்வூரின் பெருஞ்சிறப்பினைக் கூறும் நம்பி ஆரூரர்,
பார் விளங்கு
செல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்த ஊர்
மல்கு மலர் மடந்தை மன்னும் ஊர் சொல்லினிய
ஞாலத்து மிக்க ஊர் நானூற்றவர்கள் ஊர்
வேலொத்த கண்ணள் விளங்கும் ஊர் – ஆலித்து
பன்னிருகால் வேலை வளர் வெள்ளத்தும்பரொடும்
பன்னிருகால் நீரில் மிதந்த ஊர் – மன்னும்
பிரமனூர் வேணுபுரம் பேரொலி நீர்ச் சண்பை
அரன் மன்னு தண் காழி அம்பொற் – சிரபுரம்
பூந்தராய் கொச்சை வயம் வெங்குருப் பொங்கு புனல்
வாய்ந்த நல் தோணிபுரம் மறையோர் ஏய்ந்த
புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகி (4)
இப்பெயர்கள் பன்னிரண்டையும் எடுத்தியம்புகின்றார். கன்னி மதிற் கழுமலம் நாம் கருதுமூர் எனச் சிறந்த பன்னிரண்டு பெயர் (பெரிய – 34-754) என்ற பலரின் சுட்டும் 12 பெயர்கள் பற்றிய எண்ணத்தைத் தருகிறது. ஞானசம்பந்தர் தம் தேவாரத்தில் 63.117 வது பதிகங்களில் திருப்பிரமபுரம் முதல் 12 பெயர்களையும் அமைத்து வரிசையாகப் பாடுகின்றார்.
பிரமபுரம் – பிரமன் வழிபட்டதால் பெற்ற பெயர் என இவ்வூரின் வேணுபுரம் – இந்திரன் மூங்கில் உருவில் மறைந்திருந்தமையால் பெற்ற பெயர்.
தோணிபுரம்- பிரளய காலத்தில் தோணிபோல மிதந்தது ” சீகாழி எனவே தோணிபுரம் என்ற பெயர். இதனை திருநாவுக் கரசர் (83),
அலையும் பெருவெள்ளத்தன்று மிதந்த இத்தோணிபுரம்’. என அமைத்துப் பாடுகின்றனர்.
சண்பை நகர் – சண்பைப் புல்லின் மிகுதி காரணமாக இருக்கலாம். யாதவ குமாரர் சண்பையாக முளைத்தமையின் பெற்ற பெயர் என்பது புராணக்கதை
புகலி – தேவர்களின் புகலிடமாதலால் பெற்ற பெயர்..
வெங்குரு – சுக்கிரனும், இராமனும் பூசித்ததால் பெற்றபெயர்.
பூந்தராய்- திருமால் பூக் கொண்டு வழிபட்டமையால் பெற்ற பெயர்.
சீகாழி – காளியினால் பூசிக்கப்பட்ட தலமாதலின் ஸ்ரீகாளிபுரம் எனப்பட்டு, அதுவே நாளடைவில் சீர்காழி ஆயிற்று என்பர்.
புறவம் – சிபி புறாவாகி வழிபட்ட தலம் என்பர்.
சிரபுரம் – திருமாலால் வெட்டப்பட்ட சிலம்பன் என்ற அசுரன் தலை, இராகுவாக நின்று பூசித்தமையால் பெற்ற பெயர்..
கழுமலம் – பழங்காலத்தில் கழுமலம் என்ற பெயரே வழங்கியது. காவிரிபூம்பட்டினத்தை அடுத்திருப்பதால் சாழர் களின் பட்டத்து யானையை இங்கே கட்டி வைத்திருப்பது வழக்கம் அதன் காரணமாகவே கழுமலம் என்ற பெயர்உண்டாயிற்று என்பர். உயிர்களின் மலங்கள் போக்கும் தன்மையால் பெற்ற பெயர் என்ற எண்ணமும் உண்டு. இப்பன் னிரு பெயர்களிலும் சண்பை என்ற பெயரும் கழுமலம் என்ற பெயரும் தவிர, பிற பெயர்கள் இறைவன மேற்கொண்ட பக்தியின் அடிப்படையில் எழுந்த புராணக் கதையில் பிறந்தவையாகத் தோன்றுகின்றன. சண்பை புல்லின் காரணமாகப் பெற்ற பெயராகச் சண்பை அமைய, இதன் முதன் பெயராக, பழம் பெயராக அமைந்திருந்தது கழுமலம் என்பதைப் பண்டுதொட்டே இதன் செல்வாக்கு தரும் எண்ணமாகக் கொள்ளலாம்.