இன்று திருக்காறை வாசல் என அழைக்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். கல்வெட்டுகளும் இத்தலத்தை இப்பெயரிலேயே காட்டு கின்றன. சம்பந்தர் பதிகங்களினின்றும்
சீர்திகழும் திருக்காறாயில் 151-1
நீர் வயல் சூழ் திருக் காறாயில் 151-2
கடிபொழில் சூழ் திருக்காறாயில் 151-3
என இவற்றின் வளம் மட்டுமே தெரிய வருகின்றன. இவ்வூர் பற்றிய விளக்கம் புலனாகவில்லை. எனினும் இப்பெயரினை நோக்க காரை + எயில் – காரெயில் என்று ஆகி காறாயில் என திரிந்ததோ என்ற எண்ணம் மேலும் ஆய்வுக்குரியது.