காரைக்கால் அம்மையார் பிறந்த ஊராக அமைந்த காரணமாகப் பெருஞ்சிறப்பு பெற்று திகழும் ஊர். செழுந்தேன் கொம்பின் உகு காரைக்காலினில் மேயகுல தனமென நம்பியாண்டார் நம்பி தம் திருத்தொண்டர் திருத் தொகையில் சுட்ட (28) சேக்கிழார் இவ்வூர்ச் சிறப்பை மிக் அழகாகத் தருகின்றார். மரு ஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார். பெரிய – 27-343 பல்பதியும் நெடுங்கிரியும் படர்வனமும் சென்றடைவார் செல்கதி முன் அளிப்பார் தந்திருக் காரிக்கரை பணிந்து தொல்கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் மல்கு திருக் காளத்தி மாமலை வந்தெய்தினார் – பெரிய 27, 343 2. தமிழ் இடப்பெயராய்வு- பக். 91
கூனல் வளை திரை சுமந்து கொண்டேறி மண்டு கழிக்
கானல் மிசை உலவு வளம் பெருரு திருக் காரைக்கால் (பெரிய 30-1)
வங்க மலிக் கடற்காரைக்கால் (30-2) என்றும் சுட்டும் தன்மையில் இவ்வூரின் அமைப்பு ஓரளவு புரிகிறது. கடற்கரைச் சார்ந்த ஊர் : வளம் மிக்க ஊர் என்ற நிலையில் தெரியவரும் இவ்வூர் காரைச் செடிகளின் மிகுதி காரணமாக இப்பெயர் பெற்றிருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. காரைக்காயல் என் பது காரைக்கால் என்றாயிற்று என்ற எண்ணமும் உண்டு. காரைக் கால் அம்மையார் தம் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தம்மைக் காரைக்காற் பேய் (2-11) என்று சுட்டும் தன்மையில் அவர் காலத்திலும் காரைக்கால் என்றே இவ்வூர்ப்பெயர் அமைந்திருந்தது என்பதை அறியக் கூடுகின்றது.