காரியாறு பாய்ந்து வளஞ் செய்த பகுதி காரியாறு எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்ற எண்ணம் இப்பெயர் ஆற்றுப் பெயரால் பெயர் பெற்றதை வலியுறுத்தும். காரியாறு என்னும் ஊரில் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற சோழ மன்னன் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி எனப் பெற்றான். சோழன் நலங்கிள்ளி யுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத் தன் என்ற புலவனைச் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தானென்று கொல்லப்புக்குமி கோவூர் இழார் பாடி உய்யக் கொண்டார் என்று தெரிகிறது. (புறம். 47) காரி என்ற வள்ளலின் பெயருக்கும் இவ்வூர்ப் பெயருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது அறிய வேண்டும். சேலம் மாவட்டத்திலுள்ள காரிமங்கலம் என்னும் ஊர். காரி என்ற வள்ளலின் பெயரோடும், கோவை மாவட்டத்திலுள்ள ஓரி சேரி என்னும் ஊர் ஓரி என்ற வள்ளலின் பெயரோடும் தொடர் புடையதாக கருதப்படுகிறது. ஏழிற் குன்றத்திற்கு அருகில் செருவத்தூர் என்று ஓர் ஊர் இருப்பதாகவும், காரி என்றும் ஓரி என்றும் பெயர்கொண்ட. இரு பகுதிகளாக அவ்வூர் அமைந்தது என்றும், காரி, ஓரி என்ற வள்ளல்களின் பெயரால் அமைந்தது போலும் என்று கருதப் படுகறது.” காவிரிப்பூம்பட்டினம். காவிரியாறு கடலோடு கலக்குமிடத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் துலைநகராகச் சிறந்து விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். பூம்புகார் நகரம் என்றும், பூம்பட்டினம் என்றும் இவ்வூரைப் புலவர்கள் அழைத்தனர். காவிரிப்பூம்பட்டினம் சோழநாட்டின் சிறந்த துறைமுக நகரமாகும். கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளில் தமிழகத்து வாணிகத்தைப் பற்றி யெழுதிய பிளைனி போன்றவர் இந்நகர வாணிகத்தைப் பற்றித் தம் நூல்களில் குறித்துள்ளனர். புத்த. சாதக் கதைகளில் இந்நகரத்தைப் பற்றிய குறிப்பு இருப்பதால் முற்பட்ட காலத்திலிருந்தே சிறப்புற்ற துறைமுக நகரமாக இருந்திருக்க வேண்டும். இங்கு கிடைத்த புதை பொருள்களைக் கொண்டு இந்நகரம் கிறிஸ்துவுக்கு முற்பட்ட வாழ்க்கையையுடைய தென்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இவ்வூர் மருவூர்ப்பாக்கம் (புறநகர்) பட்டினப்பாக்கம் (அக நகர்) என்னும் இரு பிரிவுகளைப் பெற்றிருந்தது. இவ்வூர் கடலில் புகுமிடத்தில் இருந்ததால் புகார் என்றும் அழைக்கப்பெற்றது. காவிரிப்பூம்பட்டினம் என்பதும் அதே காரணத்தால் அமைந்த பெயர். கந்தரதத்தன், காரிக் கண்ணன், சேந்தன் கண்ணன் ஆகியோர் இவ்வூரினர். குறுந்தொகையில் 342 ஆம் பாடல் காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரதத்தனார் பாடியது. 297 ஆம் பாடல் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணன் பாடியது. 34) ஆம் பாடல் காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன் பாடியது. அகநானூற்றில் 107, 123, 285 ஆகிய பாடல்கள் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியவை, 10%, 271 ஆகிய பாடல்கள் காவிரிப்பூம்பட்டினத்துக் கண்ணனார் பாடியவை. புறநானூற்றில் 57, 58, 169, 171, 353 ஆகிய பாடல்கள் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியவை.
“நிலம்கொள வெல்கிய பொலம் பூண்கிள்ளி,
பூவிரி நெடுங்கழி நாப்பண், பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழுநகர்…… .. அ (அகம். 2050 13)
காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள்” (சிலப், அடைக்கலக் காதை. 151)
“காவிரிப் படப்பை ஈன்னகர் புக்கேன்” (மணிமே. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை, 16.)
“கவேரக் கன்னிப் பெயரொடு விளங்கிய
குவாக்களி மூதூர்ச் சென்று பிறப்பெய்தி’” (௸ பீடிகைகண்டு பிறப்புணர்ந்த காதை. 52)
“காவிரிப்பட்டினங் கடல் கொளு மென்றவத்
தூவுரை கேட்டு…………” (௸. கச்சிமாநகர்புக்க கதை. 135.)