இஃது அதிகாரத்தின் இருவகையுள் ஒன்று. அரசனுடைய படையில் தாமே சென்று
நடத்தும் தண்டத்தலைவரைப் போல, ஓரிடத்து நின்ற சொல் பல
சூத்திரங்களொடும் சென்று இயைந்து தன் பொருளைப் பயப்பிப்பது காரியகால
பக்கமாம்.
எ-டு : ‘குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்’ (தொ.எ.34 நச்.) என்ற
நுற்பாவிலுள்ள ‘நிற்றல் வேண்டும்’ என்ற சொற்றொடர் ‘குற்றிய லுகரம்
வல்லாறு ஊர்ந்தே’ (36 நச்.) என்ற நுற்பாத் தொடரொடு சென்றியைந்து
பொருள் பயப்பிப்பது போல்வன. ஏனைய வகை யதோத்தேச பக்கமாம். (சூ.வி.பக்.
17)