காரிகை

பதினோராம் நூற்றாண்டில் அமிதசாகரர் என்னும் சமணப் புலவரால்இயற்றப்பட்ட ஓர் யாப்பிலக்கண நூல். அவர் இயற்றிய யாப்பருங்கலம்என்னும் யாப்பிற்கு அங்கமாய், அலங்காரம் உடைத்தாக, காரிகை யென்னும்கட்டளைக் கலித்துறை யாப்பிற்றாக, மகடூஉ முன்னிலை பெரும்பான்மை யும்பயில இந்நூல் அமைந்தது. யாப்பருங்கலக் காரிகை என்னும்முழுப்பெயர்த்தாகிய இந்நூலுள் உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் எனமூன்று இயல்களும், அவற்றுள் முறையே 18, 16, 10 ஆகிய காரிகைச்சூத்திரங்களும், நூல் தொடக்கத்தே தற்சிறப்புப் பாயிரம் ஒன்றும்அவையடக்கம் இரண்டும் ஆகிய காரிகைகளும் உள.பிற்காலத்தே யாப்புப் பயில்வார்க்குப் பெரிதும் துணையாகப்பயிலப்பட்ட இந்நூற்சிறப்புக் ‘காரிகை கற்றுக்கவிபாடு’ என்னும் தொடரால்புலனாம். இந்நூற்கு உரையாசிரியர் குணசாகரர் என்பார். அவரே யாப்பருங்கலவிருத்தியுரைகார ரும் ஆவார் என்பது ஒரு சாரார் கூற்று.காரிகை – அழகு, கட்டளைக் கலித்துறை, மகடூஉ எனப் பலபொருள்படும்.தற்சிறப்புப் பாயிரமும் அவையடக்கமும் நீங்கலாக அமைந்த 44 கட்டளைக்கலித்துறைகள் உதாரண முதல்நினைப்புக் காரிகைகளும் உள்ளிட்டன. இந்நூற்குயாப்பருங்கலப் புறனடை என்ற பெயரும் உண்டு.வடமொழியில் உரைநடையில் வரையப்படும் நூலுக்குக் காரிகை என்பதுபெயர். தமிழில் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமையும் சூத்திரங்கள்காரிகை எனப்படும்.எ-டு : வீரசோழியத்துள் காரிகை