காம்போசம் என்பது 56 தேசங்களுள் ஒன்று சிறந்த குதிரைகள் பிறக்கும் தேயங்களுள் ஒன்று என்றும் தெரிகிறது. கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்கில் தற்போதைய பிஷாவருக்கு வடமேற்கில் இப்பொழுது இருக்கும், நிலப்பகுதியின் பண்டைய பெயரே காம்போஜம் என்பது. தென் கிழக்கு ஆசியாவிலுள்ள கம்போடியா என்ற நாட்டுக்கும் முன்பு காம்போஜம் என்ற பெயர் வழங்கியது.
“கலக்கமில் சிறப்பிற் காம்போசத்தொடு
நலக்காந்தார மென்னாட்டுப் பிறந்த
இலக்கணக் கு திரையிராயிரத் திரட்டியும்” (பெருங் 4:11:25 27) “கொங்கணக்கூத்தர்” என்ற இலக்கியத் தொரடர் கொங்கண தேசத்தைக் குறிக்கிறது. கொங்கணம் என்பது ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று, இது மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கும், அரபிக்கடலுக்குக் கிழக்கும்,கூர்ச்சரத்திற்குத் தெற்கும், கோவாவிற்கு வடக்குமாக உள்ள நிலப்பகுதி. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப்பகுதியில் வடக்கே. டாமன் முதல் தெற்கே கோவா வரையிலுள்ள நிலம் கொங் கணம் எனப்படும்.