திருக்கானூர் என்ற பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது இவ்வூர். சம்பந்தர் (பதி 73) அப்பர் (பதி 190) பாடல் பெற்ற ஊர் இது. கொள்ளிடக் கரையில் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள ஊர் இது என்பதனை நோக்க, காட்டுப்பகுதியில் அமைந்த ஊர் என்பது வெளிப்படையாக அமைகிறது.