காந்தாரநாடு

‌‌‌‌‌காந்தார நாடு என்பது இரத்தினபுரம்‌ என்னும்‌ ஒரு நகரத்தை யுடையது. சிறந்த குதிரைகள்‌ பிறக்கும்‌ இடங்களுள்‌ ஒன்று எனத்‌ தெரிகிறது. இந்தியாவில்‌ வடமேற்‌ கெல்லைப்புறத்தில்‌ காபுல்‌ நதி பாயும்‌ தாழ்வானப்‌ பள்ளத்தாக்கில்‌ இருந்த ஒரு நாடு காந்தார நாடு. பண்டைய 56 நாடுகளில்‌ ஓன்று. இது இன்றைய பாகிஸ்‌ தானிலுள்ள பிஷாவார்‌ (புருஷபுரம்‌), ராவல்‌ பிண்டி ஆகிய மாவட்டங்கள்‌ சேர்ந்த பகுதியாகும்‌. காந்தார நாடும்‌ உரோமமும்‌ பெயர்‌ பெற்றவை என்று ரிக்வேதம்‌ கூறுகிறது. காந்தாரம்‌ இசைக்கும்‌, நாட்டியத்திற்கும்‌ புகழ்‌ பெற்ற நாடாக இருந்தது. காந்தாரத்தைப்‌ பற்றிய குறிப்புகள்‌ வால்மீகி இராமாயணத்‌திலும்‌ காணப்படுகிறது. ஒரு சமயம்‌ வரலாற்றுப்‌ புகழ்‌ மிக்க தட்சிலம்‌ காந்தாரத்தில்‌ சேர்ந்திருந்தது. தாலமி என்ற மேனாட்டு ஆரியர்‌ காந்தாரியாய்‌ (Gandar ioi) என்று குறித்தார்‌.
“காந்தார மென்னுங்‌ கழிபெரு நாட்டும்‌
பூரூவ தேயம்‌ பொறை கெட வாமும்‌
அத்திபதி யெனுமரசாள்‌ வேந்தன்‌
மைத்துனனாகய பிரமதருமன்‌
ஆங்கவன்‌ தன்பாலணைந்தற னுரைப்போய்‌” (மணிமே. 9:12 16)
“கண்டார்‌ புகழுங்‌ கலக்கமில்‌ சிறப்பிற்‌
காந்தார மென்னும்‌ ஆய்ந்த நாட்டகத்‌
தீண்டிய பல்புக ழிரத்தின புரத்துள்‌
மாண்ட வேள்வி மந்திர முத்தீச்‌
சாண்டிய னென்னுந்‌ சால்புடை யொழுக்கின்‌
ஆய்ந்த நெஞ்சத்‌ தந்தணன்‌ மகன்‌”. (பெருங்‌. 3; 7: 190 195)
“நலக்‌ காந்தார மென்னாட்டு ப்பிறந்த
இலக்கணக்‌ குதிரை யிராயிரத்திரட்டியும்‌”.(௸.4:11:26 27)