என்ற காட்டுப்பள்ளி என்று தேவாரம் சுட்டும் தலத்தை, இன்று இரண்டு ஊராகச் சுட்டுகின்றனர். மேலைத் திருக்காட்டுப்பள்ளி கீழைத் திருக்காட்டுப்பள்ளி என ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற நிலையில் காட்டுப்பள்ளி என்ற குறிப்பும், அங்குள்ள சிவன் கோயில் சிறப்பும் மட்டுமே விளக்கம் பெறுகின்றன. சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் நூலாசிரியர், இன்றைய நிலையில் மேலைத் திருக்காட்டுப் பள்ளி, கீழைத்திருக் காட்டுப்பள்ளி என இரண்டு கோயில்களையும் சுட்டி. அவை திருக்காட்டுப்பள்ளி, ஆரணியேசுரர் கோயில் என்ற இரண்டு ஊர்களாக, தஞ்சையில் அமைந்திருக்கும் நிலையையும் விளக்கு கின்றார். குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ளது முதல் தலம். சம்பந்தர் அப்பர் பாடல் பெற்றது. இரண்டாவது தலம், திருவெண் காட்டுக்கு அருகில் உள்ள தலம் என்கின்றார். ! ஆயின் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற பதிகள் கீழைத் திருக்காட்டுப்பள்ளி (5) மேலைத் திருக்காட்டுப்பள்ளி (287) எனத் தொகுத்தோர் குறிப்பிட்டாலும் பாடலில் காட்டுப்பள்ளி என்றே இரண்டு பதிகங்களிலும் அமைவதும் காவிரியின் வளம், காவிரிக் கரையில் இது அமைந்திருந்த தன்மை இவற்றை இரு பதிகங்களும் சுட்டுவதும், அன்று காட்டுப்பள்ளி என்று பாடல் பெற்ற தலம் இன்று குட முருட்டி ஆற்றின் கரையில் இருந்ததாகத் தான் இருந்திருக்கவேண்டும். பின்னர், கீழைத் திருக் காட்டுப்பள்ளி சிறப்பு பெற. இதனைத் தொகுப்பாசிரியர்கள் இரண்டாகச் சுட்டியிருக்க வேண்டும் எனவும் கருதலாம். மேலும், சான்றுகள் வழிதனை ஆராயின் உண்மை தெளிவாகும். மேலைத் திருக்காட்டுப் பள்ளி என்ற காவிரிக் கரைத்தலமே இன்றும் திருக்காட்டுப் பள்ளி என்று சுட்டப்பட, கீழைத்திருக் காட்டுப்பள்ளி ஆரணியேசுவரர் கோயில் என்று சுட்டப்படும் தன்மை ஆரணியேசுவரர் கோயிலே கீழைத்திருக் காட்டுப்பள்ளி எனச் சிலரால் குறிப்பிடப்பட்டு இருக்கவேண்டும். எனினும் செல்வாக்கின்மை ஆரணியேசுவரர் கோயிலே வழக்கில் அமைந்தது எனவும் நினைக்கத் தோன்றுகிறது. காட் டில் பள்ளி கொண்ட நிலையிலேயே இப்பெயர் பொருத்தம் அமைய வல்லது.