காட்கரை

நம்மாழ்வாரால் பாடல் பெற்ற வைணவத் தலம். கேரளத்தில், எர்ணாகுளத்திலிருந்து பத்து கல் தொலைவில் உள்ளது இவ்வூர். காவிகமழ் திருக்காட்கரை என்றும் (நாலா 301) சுனை சொள் பூஞ்சோலைத் தென் காட்கரை (நாலா 3020) என்றும், இயற்கைவளம் நிரம்பிய இடம் என்பது மட்டும் சிறப்பாக இவர் பாடலில் விளக்கம் பெறுகின்றது. காவிக்கரை காட்கரை என்றாயிற்றோ அல்லது கழுநீர்க்கரை. காட்கரை என்றாயிற்றோ என்றுதான் எண்ணம் தோன்றுகிறதே தவிர, பிற எண்ணங்கள் இவ்வூர் பற்றி அறியக் கூடவில்லை.