பொன் எனப் பொருள்படும் காஞ்சனம் என்ற சொல்லடி யாய்ப் பெயர் பெற்றுள்ள ஊர் காஞ்சனபுரம். பொன்னுலகை (விண்ணுலகை)ச் சேர்ந்தது போலும். வெள்ளிமலையிலுள்ள “சேடி” என்ற வித்தியாதரருலகில் உள்ளது காஞ்சனபுரம் என்று இலக்கியம் கூறுகிறது. “வடதிசை விஞ்சைமாநகர்த் தோன் றி” (மணிமே, 15:81) (வடதிசை விஞ்சைமாநகர் வடதிசையிலுள்ள வித்தியாதர நகரமாகிய காஞ்சனபுரம்)
“மாசில் வாளொளி வடதிசைச் சேடிக்
காசில் காஞ்சனபுரக் கடிநகருள்ளேன்
விஞ்சையன் தன்னோடென் வெவ்வினை யுருப்பத்
தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்” (௸. 17:21.24)