தொல்காப்பியனார் தோன்ற விரித்துரைத்த யாப்பிலக்கணத் தைப்பல்காயனார் வகுத்துரைப்பவே, நல்யாப்பினைக் கற்றார் மதிக்கும் கலைவல்லகாக்கைபாடினியார், அவ் விலக்கணத்தைத் தம் நூலுள் தொகுத்துரைத்தார்.காக்கை பாடினியார் பெயரானே, அந்நூல் காக்கைபாடினியம் எனவழங்கப்படுவதாயிற்று.தொல்காப்பியனார்தம் ஒருசாலை மாணாக்கர் எனக் கூறப்படும்பெருங்காக்கைபாடினியாரால் இயற்றப்பெற்ற இவ்வியாப்புநூல்அகவல்நூற்பாக்களால் ஆகியது. யாப்பருங்கலம் முதலிய பிற்கால நூல்கள்இதனை அடி யொற்றியே எழுந்தன. இதன் நூற்பாக்கள் 73 யாப்பருங்கலவிருத்தியுரை முதலியவற்றில் இடம் பெற்றுள. இவற்றுள் எதுகை முதலிய தொடைஇலக்கணம், ஆசிரிய வகைகள் சில, ஆசிரியத் தாழிசை, கலிவகைகள் சில, வஞ்சிவிருத்தம் – முதலிய சில நீங்கலான எல்லாச் செய்திகளும் காணப்படுகின்றன.(யா. வி. பக். 19 முதலியன.)இலக்கண விளக்கம் – செய்யுளியல் ‘பிற்சேர்க்கை’ காண்க.