உருவக அணி, உவமை அணி முதலாக வாழ்த்து ஈறாக எய்திய இருபத்தெட்டுஅலங்காரத்தாலும் எழுத்துச் சொற்பொருள் யாப்பு நெறியாலும் குற்றமறச்செய்யும் பாவலன், அவையும் அரசும் அறியப் பாடுவோன், முத்தமிழ் வல்லோன்,நாற்கவி பாடுவோன், உத்தமச் சாதியிற் பிறந்தோன், உறுப்புக் குறையாதுஒழுக்கமொடு புணர்ந்தோன், முப்பது முதலாக எழுபது ஈறாய பிராயமுடையோன்ஆகிய இத்தகைய கவிஞன் பாடிய செய்யுளைக் கொள்ளுமுறையாவது: தோரணம்நாட்டித் துகிற்கொடியை எடுத்து, முரசொலிப் பவும் மறையோர் வாழ்த்தவும்,அழகிய பூத்தொழிலுடைய கலிங்கத்தினைத் தரைமீது பரப்பி, பல தானியமுளைகள்தோன்றிய பாலிகைகளும் விளக்கும் பூரண கும்பமும் பிறவும் மங்கலப்பொருளாகஎடுத்து, விதானித்துப் படுத்த தூண் நிரைகள் அமைந்த பந்தரின்கீழ்ப்பலசுற்றமும் நெருங்க, பாவையர் பல்லாண்டிசைப்ப, அக்கவிஞனை அவ் வளமனைக்கண் அழைத்துக் கொண்டுவந்து, தான் உடுத்துச் சூடுவதன் மேலும்,அவனையும் வெண்துகில் உடுப்பித்து வெண்பூச் சூடுவித்துப் புரவலன் தன்தவிசின் மீது இருத்தித் தான் அயலில் இருந்து அம்மங்கலச் செய்யுளைமகிழ்ந்து கேட்டு, அவனுக்குப் பொன்னும் ஆடையும் பூணும் கடகமும்என்றின்னவற்றை அவன் வேண்டுவன பிறவற்றோடும் அளித்து, ஏழடி நிலம்புலவன்பின் போய் மீளுதல் அவ னுக்குக் கடனாவது. (பிங். 1370)இனி, அகலக் கவிகொள்ளு முறையாக இலக்கண விளக்கம் (பாட். 179)இயம்பும் செய்திகள் வருமாறு :நல்லாசிரியனுக்கு அமைந்த நற்குணங்களை எய்திய புலவ னால் செய்யப்பட்டசெய்யுளை, நல்லவை நிறையவை ஆகிய மன்றின்கண், ஒளிகிளர் அழகியவிளக்கத்தினோடும் ஏனை எழுவகை மங்கலங்களும் பொலிய, நான்மறையோர் ஆசிகூற, நாலவிட்ட பூமாலைகள் நறுமணம் செய்ய, பலவகை வாத்தியத் தொகுதிகள்ஒலிக்க, அஞ்சொல் மடவார்கள் செஞ்சொல்லால் வாழ்த்தெடுப்ப, பாமகளைப்புணரும் திறத் தாலே வெண்துகிலும் வெண்மலர்மாலையும் வெண்முத்துமாலையும் அலங்கரித்துக்கொண்டு, விசித்திரத்தவிசின் இருந்து, அப்புலவனுக்கும் அன்னதோர் தவிசு இட்டு, எண்திசையில் உள்ளாரும் துதிக்கத்தண்டமிழ்ப்பாமாலை சூடி, மருதநிலத்து உளவாகிய வளம் மாறாத ஊரும், பெரியஆபரணமும், பொன்னும், களிறும், பண் அமை இரதமும், குதிரையும் ஆகியவற்றைஅப்புலவற்குப் பரிசிலாகக் கொடுத்து ஏழடி புலவன் பின்போய் மீளுதல்தமிழ் நாட்ட கத்தே அகலக்கவியைக் கொள்வோர்க்கு வகுக்கப்பட்ட உரிமைத்திறமாம் என்ப.