தென் ஆற்காடு – மாவட்டத்தைச் சார்ந்து கழிப்பாலை என்ற ஊர் அமைகிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலம் இது.1. சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகள். பக். 12. 2. வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதம் கானிடை நீழலிற் கண்டல் வாழும் கழிசூழ் கலிக்காமூர் -திருஞா- 363- இதனைப் பாலை என்று சுட்டிப்பாடுகின்றார் மாணிக்கவாசகர். அந்தரத்திழிந்து வந்தழகமர் பாலையும். சுந்தரத் தன்மை யொடு துதைந்திருந்தருளியும் (கீர்த்தி – 98-99) என இவர் அழகு வாய்ந்த ஊராக இதனைக் குறிக்கின்றார். திருநாவுக்கரசர். கறங்கோத மல்கும் கழிப்பாலை (6-3) கழியுலாம் சூழ்ந்த கழிப் பாலை (6-5) கண்ணன் பூஞ்சோலை கழிப்பாலை (6-6) கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை (6-7) கைதைமடற் புல்குதென் கழிப்பாலை (107-1) தாட்பட்ட தாமரைப் பொய்கை யந்தண் கழிப்பாலை (107-3) போன்று பலவாறு சித்திரிக்கின்றார். சுந்தரர். கடற் சாரும் கழனிக் கழிப்பாலை என்கின்றார் (23-8). ஞானசம்பந்தர், கடல் சூழ் கழிப்பாலை (175-1) – லங்கள் வந்துல வும் கழிப்பாலை (302-8) பாய்புனல் சூழ் கழிப்பாலை (302-11) கடல் நண்ணும் கழிப்பதி (157-5) கடியார் பொழில் சூழ் (157,2) என்கிறார். சேக்கிழாரும், கன்னாரும் எயில் புடை சூழ் கழிப் பாலை (பெரிய – ஏயர் – 166) என்கிறார். உள்ளது. இவற்றை நோக்க கடல் பக்கம் அமைந்த ஊராக இது இருந்திருக்கும்போல் தோன்றுகிறது. எனினும், இவ்வூர் பற்றி பேசும்போது. தில்லையிலிருந்து 5 கி.மீ. உள்ள திருநெல்வாயில் என்னும் சிவபுரிக் கோயிலுக்கு மிகவும் அருகில் தனி ஆலயமாக பாடல் காலத்திலிருந்த பழைய கோயில் தில்லைக்குத் தென் கிழக்கில் 11 கி.மீ. தொலைவில் திருக்கழிப்பாலை என்எற இடத்தில் இருந்ததாகவும் அது கொள்ளிட நதியால் கொள்ளப் பட்டபையால் அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது என்ற எண்ணம் அமைகிறது. மேலும் இது முன்பு கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் காரைமேடு என்னும் இடத்தில் இருந்தது. அங்கு இருந்தபொழுது கொள்ளிடத்தின் வெள்ளப் பெருக்குத் திருக்கோயிலை முற்றிலும் பாழ் படுத்திவிட்டது. படுகை முதலியார் குடும்பத்தில் திரு பழனியப்ப முதலியார் என்பவர் சிவபுரிக்குத் தெற்கில் கோயில் கட்டி அதில் கழி. பாலை இறைவரையும் இறைவியாரையும் ஏனைய பரிவாரத் தேவதைகளையும் எழுந்தருளிவித்துள்ளனர். இது சிதம்பரத்திற்குத் தென்கிழக்கு சுமார் 3 மைல் தூரத்தில் இருக்கிறது சுருத்தும் இதனோடு தொடர்புடையதாக அமைகிறது. எனவே இடைக்காலத்தில் சுட்டப்படும் கழிப்பாலை என்ற ஊர் இன்று இருக்கும் ஊர் அன்று என்பது தெரியவருகிறது. மேலும் கடற்கரைத் தலமாக இலக்கியங்கள் சுட்டும் இவ்வூரினைக் கொள்ளிட ஆற்றின் கரையில் இருந்தது என்று கூறும் தன்மையும் ஆராய்தற் குரியது. எனினும் ஊர்ப்பெயர் கழி யுடன் தொடர்புடையது என்பது திண்ணமாக விளங்கி நிற்கிறது. எனினும் பாலை என்பதற்குரிய பொருள் விளக்கம் பெறவில்லை.