கழிநெடில்

கழிநெடிலடி; ஐஞ்சீரின் மிக்க சீரான் வரும் அடி. (யா. கா. 12)யாப்பருங்கல விருத்தி அறுசீர் முதலாகப் பத்துச்சீர் இறுதி யாகவரும் அடியெல்லாவற்றையும், பத்துச்சீரின் மிக்கும் பதின்மூன்றுசீரின்காறும் வருவனவற்றையும் கழிநெடிலடி யின் பாற்படுத்து வழங்குகஎன்னும். (25).எண்சீரின் மிக்க அடியான் வருவன சிறப்பில என்றார் காக்கைபாடினியார். ஒன்பதின்சீரடியும் பதின்சீரடியும் இடையாகு கழிநெடிலடிஎனவும், பதின்சீரின் மிக்கு வருவன எல்லாம் கடையாகு கழிநெடிலடி எனவும்யா.வி. உரை யாசிரியர் கூறுவர்.அறுசீர் முதலாகப் பதினொரு சீர் ஈறாகக் கழிநெடிலடி நிகழும் என்பர்வீரசோழிய உரைகாரர். (கா. 109)