கழாஅர்‌,

கழாஅர்‌ என்னும்‌ ஊர்‌ மத்து என்னும்‌ மன்னனுக்குரியது. நிலவளம்‌ நீர்வளம்‌ மிக்கது என்று சங்க இலக்கியங்கள்‌ கூறுகின்றன. கீரன்‌ எயிற்றி என்றும்‌ கீரன்‌ எயிற்றியன்‌ என்றும்‌ வழங்கப்‌ பெற்ற சங்க காலப்புலவர்‌ இவ்வூரினர்‌. ஆகவே கழார்க்கீரன்‌ எயிற்றி என்றோ கழார்க்கீரன்‌ எயிற்றியன்‌ என்றோ பெயா்‌ பெற்றார்‌. குறுந்தொகையில்‌ 35, 261, 330 ஆகிய பாடல்களும்‌, அ௧நானூற்றில்‌ 163, 217, 235, 2914 ஆகிய பாடல்களும்‌ இப்புலவர்‌ பாடியவை.
“மாசுஇல்‌ மரத்த பலி உண்‌ காக்கை
வளியபொருநெடுஞ்சினை தளியொடுதாங்கி,
வெல்‌ போர்ச்‌ சோழர்‌ கழாஅர்க்‌ கொள்ளும்‌
நல்‌ வகை மிகுபலிக்‌ கொடையொடு உகுக்கும்‌
அடங்காச்‌ சொன்‌றி, அம்பல்‌ யாணர்‌
விடக்குடைப்‌ பெருஞ்சோறு, உள்ளுவன இருப்ப,” (நற்‌. 281:1 6]
“நறுவடி மாஅத்து விளைந்து உகுதீம்பழம்‌
நெடு நீர்ப்‌ பொய்கைத்‌ துடுமென விழூஉம்‌,
கைவண்‌ மத்தி, கழாஅர்‌ அன்ன” (ஐங்‌. 61:1 3)