மது கிடைக்கும் இடம் அல்லது விற்கும் இடம் நாளடைவில் குடியிருப்பாகி ஊராக அமைந்து கள்ளூர் என்ற பெயரைப் பெற்றிருக்கலாம். சங்ககாலப் பாடல்கள் மூலம் நமக்குக் கடைக்கும் ஊர்ப் பெயர்களுள் கள்ளூர் என்பது ஒன்று. பெண்ணின் அணிநலத்திற்கு உவமையாகவே கூறப்பெற்றுள்ளது.
“தொல் புகழ்நிறைந்த பல் பூங்கழனி
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்
இருநுதற் குறுமகள் அணிதலம் வவ்விய” (அகம் 259:14 16)