கள்ளில்‌

ஆத்திரையன்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ கள்ளில்‌ என்னும்‌ ஊரைச்‌ சேர்ந்தவர்‌ ஆதலின்‌ கள்ளில்‌ ஆத்திரையன்‌ எனப்பெயர்‌ பெற்றார்‌. பெரும்பாலும்‌ மக்கள்‌ வாழும்‌ வீட்டைக்‌ குறிக்கும்‌ ‘இல்’‌ என்பது சில பழமையான ஊர்ப்பெயர்களில்‌ சேர்ந்திருக்கிறது, திருச்சி மாவட்டத்தில்‌ உள்ள அன்பில்‌ என்ற ஊர்ப்பெயர்‌ ஒப்பு நோக்கத்தக்கது, கள்ளில்‌ என்‌ற பெயருடன்‌ தொண்டை நாட்டில் ஓர்‌ ஊர்‌ உள்ளது.. குறுந்தொகையில்‌ 293ஆம்‌ பாடலும்‌, புறநானூற்றில்‌ 175, 389 ஆலய பாடல்களும்‌ கள்ளில்‌ ஆத்திரையன்‌ பாடியவை. [அடுத்து வரும்‌ கள்ளூர்‌ என்ற ஊர்ப்பெயரும்‌ இக்‌ கள்ளில்‌ என்ற ஊர்ப்பெயரும்‌ ஒரே ஊரைக்‌ குறிக்கன்றனவா அல்லது வெவ்வேறு ஊரா என்பது ஆய்ந்து முடிவு காண வேண்டிய ஒன்று.]