தானே தலைவனாகிய முனைவனான் செயற்கைநலம் தோன்றச் செய்யப்பட்ட நூல்கள்ஆலவாய்ப் பெருமானடிகள் செய்த களவியல் போல்வன. அகத்தியம் தொல்காப்பியம்முதலிய நூல் தோன்றிய பிற்காலத்தே களவியல் செய்யப்படினும்,இயற்கைநூலின் வழித்தாகவோ செயற்கை நூலின் வழித் தாகவோசெய்யப்படாமையின், முனைவன் அருளிய முதல் நூல் எனவே அது சான்றோரால்கொள்ளப்பட்டது. (பா. வி. பக். 98) (தொ. பொ. சூ. 649 பேரா.)