திருக்களர் என்று சுட்டப்படும் இவ்வூர் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். சேக்கிழாரும் சிறப்பாக இவ்வூரைச் சித்திரிக்கின்றார். கோங்குலா மலர்ச்சோலை வண்டினங் கிண்டி மாமதுவுண்டிசை செயத் தெங்கு பைங்கமுகம் புடைசூழ்ந்த திருக்களர்.டய என்பது சம்பந்தர் பாடல் (188 – 5). களர் நிலத்தில் அமைந்த கோயிலை ஊராதலின் திருக்களர் என்னும் பெயர் எய்திற்று என்பர். தலவிருட்சம் பாரிஜாதம் காரணமாகப் பாரிஜாத வனம் என்னும் பெயர் உண்டு. !