சுந்தரர் பாடல் உணர்த்தும் ஊர்ப்யெராக இது அமைகிறது. ஆர் கொண்ட வேற் கூற்றன் களந்தைக் கோன் அடியேன் (39-6). இவ்வூர் மரூஉப் பெயர் போன்று தோன்றுகிறது. இன்று களத்தூர் என்றதொரு பெயரைக் காண்கின்றபோது களந்தையும் களத்தூர் போன்றதொரு ஊர்ப்பெயர்த் திரிபாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.