நாற்சீரடி நான்குடையன கலி விருத்தம். அடிமறியாய் நாற்சீரடிநான்காய் வருவன கலிமண்டில விருத்தம்; அடிமறி ஆகாதே நாற்சீரடி நாலாய்வருவன கலிநிலை விருத்தம். கலி விருத்தம் கலிவெண்பாவின் இனமாம்.கலிமண்டில விருத்தம் – அடிதோறும் பொருள் முடியும் கலி விருத்தம்;யாதோரடியையெடுத்து முதல் நடு இறுதியாக உச்சரிப்பினும் ஓசையும்பொருளும் மாறாது வருவது.எ-டு :‘இந்திரர்கள் ஏத்துமடி ஈண்டுயிர்கள் ஓம்புமடி;வெந்திறல் ஞாயிற்றெழில் வீவிலொளி வெல்லுமடி;மந்திரத்தில் ஓதுமடி மாதுயரம் தீர்க்குமடி;அந்தரத்தின் ஆயவிதழ்த் தாமரையி னங்கணடி’கலிநிலை விருத்தம் வருமாறு :‘விரிகதிர் மதிமுக மடநடை கணவனொடரியுறு கொழுநிழல் அசையின பொழுதினில்எரிதரு தளிர்சினை இதழ்மிசை உறைவோன்தரவிலன் எனின்மனம் உரைமினம் எனவே’ (யா.க. 89 உரை)நாற்சீர் ஓரடி நான்கு கொண்ட கவிகளிற் சில கலிவிருத்தம் எனப்படும்.ஈரசைச் சொற்கள் ஐந்து ஓரடியாக நிகழும் கலிவிருத்தங்களும் உள. (அறுவகையாப்பு. 38, 39.)