கலி ஒத்தாழிசை

ஏனைய அடிகள் ஒத்து ஈற்றடி மிக்கு ஒருபொருள் மேல் மூன்றடுக்கிவருவன. கலியொத்தாழிசை, கலித்தாழிசை. இவற்றை ஒன்றாகக் கூறுவாருமுளர்.ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி ஈற்றடிமிக்கு ஏனையடிகள் ஒவ்வாது வரின்சிறப்பில்லாக் கலியொத்தாழிசையாம். இஃது ஒத்தாழிசைக் கலிப்பாவின்இனம்.எ-டு :‘கொய்தினை காத்தும்; குளவி யடுக்கத்தெம்பொய்தற் சிறுகுடி வாரல்நீ ஐய! நலம்வேண்டின்’;‘ஆய்தினை காத்தும்; அருவி யடுக்கத்தெம்மாசில் சிறுகுடி வாரல் நீ ஐய! நலம் வேண்டின்’;‘மென்தினை காத்தும்; மிகுபூங் கமழ்சோலைக்குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய! நலம்வேண்டின்’. (யா.க. 87உரை).