கலியடியும் ஆசிரியஅடியும் இணைந்து வந்த யாப்பு.எ-டு : ‘என்றுதன் மகளைநோக்கித் தொன்றுபடு முறையானிறுத்திஇடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட்பெயரிடுவாள்குடமுத லிடைமுறை யாக்குரல் துத்தம்கைக்கிளை யுழையிளி விளரி தாரமெனவிரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே’. (சிலப்.ஆய்ச்.)இதன்கண், முதலீரடியும், கலியடி; ஏனையவை ஆசிரியஅடி.