கலித்தளை தட்டுக் கலியோசை தழுவி ஈற்றடி வெண்பாவே போல முச்சீரான்முடிவது. ஈற்றடி கலியோசை கொண்டு, வேற்றுத்தளை தட்டு முச்சீரான்இறுவனவும் வெண்கலிப்பா எனப்படும், பெரும்பாலும் ஈற்றடி வெள்ளோசைகொண்டும் கொள்ளாதும் முச்சீரடியான் இறுவதே கொள்ளப்படும்.வெண்கலிப்பா எனினும், கலிவெண்பா எனினும் ஒக்கும்.(யா. க. 85 உரை.)இது சிறப்புடைக் கலித்தளையானும், உரிச்சீர் வெண்டளை யானும்,சிறப்பில்லாத ஆசிரிய நிரைத்தளையானும் சிறப்பில் லாத வஞ்சித்தளையானும்வரும்.ஒருசாரார் செப்பல் ஓசையில் சிறிதும் வழுவாது வருவன கலிவெண்பாஎன்றும், சிறிது வழுவி வருவன வெண்கலிப்பா என்றும் கூறுப. (யா. கா. 32உரை; யா. கா. 85 உரை)எ-டு : ‘பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானாவிண்கொண்ட அசோகின்கீழ் விழுமியோர் பெருமானைக்கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும்பயில்வார்கள்விண்ணாளும் வேந்தரா வார்.’இது சிறப்புடைய கலித்தளையான் வந்த கலிவெண்பா.‘நாகிளம்பூம் பிண்டிக்கீழ் நான்முகனாய்வானிறைஞ்சமாகதஞ்சேர் வாய்மொழியான் மாதவர்க்கும்அல்லார்க்கும்தீதகல எடுத்துரைத்தான் சேவடிசென் றடைந்தார்க்குமாதுயரம் தீர்ப்ப தெளிது.’இஃது உரிச்சீர் வெண்டளையான் (பெரும்பாலும்) வந்த கலிவெண்பா.‘ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தண்வார்மலர்த் தடங்கண்ணாள் வலைப்பட்டு வருந்தியவென்தார்வரை அகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்சீர்நிறை கொடையிடை சிறந்து.’இது சிறப்பில் ஆசிரிய நிரைத்தளையான் வந்த கலிவெண்பா.‘முழங்குகுரல் முரசியம்ப முத்திலங்கு நெடுங்குடைக்கீழ்ப்பொழிந்தமதக் கடுஞ்சுவட்டுப் பொறிமுகத்த களிறூர்ந்துபெருநிலம் பொதுநீக்கிப் பெயராத பெருமையாற்பொருகழற்கால் வயமன்னர் போற்றிசைப்ப வீற்றிருப்பார்மருள்சேர்ந்த நெறிநீக்கி வாய்மைசால்குணந்தாங்கிஅருள்சேர்ந்த அறம்புரிந்தார் அமர்ந்து’.இது சிறப்பில் வஞ்சித்தளையான் வந்த வெண்கலிப்பா. (யா. க. 85உரை)