நாற்சீரடி நான்கானாகிய கலிவிருத்தம் பெரும்பாலும் எட்டு வகையுள்அடங்கும்.1. ஒரு மா, மூன்று கூவிளம் கொண்ட அடி நான்கான் அமைவது.எ-டு : உலகம் யாவையும் தாமுள வாக்கலும்நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலாஅலகி லாவிளை யாட்டுடை யாரவர்தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே! (கம்பரா. கடவுள். 1)2. இரண்டு விளம், ஒரு மா, ஒரு கூவிளம் கொண்ட அடி நான்கான்அமைவது.எ-டு : ‘மஞ்சுசூழ் மணிவரை எடுத்த மாலமர்இஞ்சிசூழ் அணிவரை இருக்கை நாடதுவிஞ்சைநீள் உலகுடன் விழாக்கொண் டன்னதுதுஞ்சுநீள் நிதியது சுரமை என்பவே’. (சூளா. 7)3. மூன்றுமா, ஒருகாய் அல்லது விளம் கொண்ட அடிநான்கான் அமைவது.எ-டு : ‘பரவக் கெடும்வல் வினைபா ரிடம்சூழஇரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடிஅரவச் சடையந் தணன்மே யஅழகார்குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே’. (தே. II 35-1)4. முதற்சீர் மா, இரண்டாவது மா அல்லது விளம், மூன்றாவதும் மாஅல்லது விளம், நான்காவது காய் – என்றமைந்த அடிநான்கான் அமைவது.எ-டு : ‘கண்ணார் கடல்சூழ் இலங்கைக் கிறைவன்தன்திண்ணா கம்பிளக் கச்சரம் செலவுற்றாய்விண்ணோர் தொழும்வேங் கடமா மலைமேயஅண்ணா அடியேன் இடர்களை யாயே.’ (பெரியதி. I 10-1)5. மூன்று மா, ஒரு காய் கொண்ட அடி நான்கான் அமைவது.எ-டு : ‘வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைதிங்க ளோடு திளைக்கும் திருப்புத்தூர்கங்கை தங்கு முடியார் அவர்போலும்எங்கள் உச்சி உறையும் இறையாரே’ (தே. I 26-1)6. நாற்சீரும், மாச்சீராய் வரும் நான்கடியான் அமைவது.எ-டு : ‘தாந்தம் பெருமை அறியார் தூதுவேந்தர்க் காய வேந்தர் ஊர்போல்காந்தள் விரல்மென் கலைநன் மடவார்கூந்தல் கமழும் கூட லூரே’ (பெரியதி. II 2-1)7. மூன்று கனிச்சீர், ஒரு மாச்சீரால் வரும் நான்கடியான்அமைவது.எ-டு : ‘வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்பொய்யோவெனும் இடையாளொடும் இளையானொடும் போனான்மையோமர கதமோமறி கடலோமழை முகிலோஐயோஇவன் வடிவென்பதொர் அழியாஅழ குடையான்’ (கம்பரா. 1296)8. விளம். விளம் அல்லது காய், மா, விளம் அல்லது காய் என்றமைந்தநாற்சீரடி நான்கான் அமைவது.எ-டு : ‘முடிகெழு மன்னர்முன் இறைஞ்சு தம்மைத்தம்கடிகமழ் அகலத்துக் கொண்ட காதலெம்அடிகளும் அயலவர் போல ஆயினார்கொடிதிது பெரிதெனக் குழைந்து போயினார்’ (வி. பா.படலம்.5)