கலிவிருத்தத்தின் பாற்படுவன

கலிவிருத்தம் சமமான நாற்சீரடி நான்காய் அமைவது என்பதுஇலக்கணமாயினும், கலிவிருத்தம் போன்று ஐந்தடி ஆறடி களான்வருவனவற்றையும் அவ்விருத்தத்துள் அடக்கிக் கொண்டு அவற்றைக் கொச்சகக்கலி என்று கூறுதலும் ஆம்.எ-டு :‘கோழியும் கூவின; குக்கில் அழைத்தன;தாழியுள் நீலத் தடங்கணீர்! போதுமினோ!ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக்கூழை நனையக் குடைதும் குளிர்புனல்ஊழியும் மன்னுவாம் என்றேலோ ரெம்பாவாய்!’என ஐந்தடியான் வந்த பாடலை ஒப்புமை நோக்கிக்கலிவிருத்தத்தின்பாற்படுத்துவர். இதனைத் தரவு கொச்சகம் எனினும்அமையும். (யா. க. 93 உரை)