கலியடியுள், தன்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும்,தன்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும்,தன்தளையும் ஆசிரியத்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும்,வெண்டளையே வருதலும், ஆசிரியத்தளையே வருதலும்,வஞ்சித்தளையும் தன்தளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையும் தன்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையும் தன்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையும் வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும்,வஞ்சித்தளையே வருதலும் என்று இவ்வாற்றால் பலபட வரும்.எ-டு :‘குடநிலைத் 1 தண்புறவில் 2 கோவலர் 3 எடுத்தார்ப்பத் 4தடநிலைப் 5 பெருந்தொழுவில் 6 தகையேறு 7 மரம் பாய்ந்து 8வீங்குபிணிக் 9 கயிறொரீஇத் 10 தாங்குவனத் 11 தேறப்போய்க் 12கலையினொடு 13 முயலிரியக் 14 கடிமுல்லை 15 முறுவலிப்ப,எனவாங்குஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும்கானுடைத் தவர்தேர் சென்ற வாறே’.இக்கலிப்பாவினுள் ‘இயற்சீர் வெண்டளை 1 , வெண்சீர் வெண்டளை 2 , நிரையொன்றாசிரியத்தளை 3 , கலித்தளை 4 , நிரையொன்றாசிரியத்தளை 5 , கலித்தளை 6 , கலித்தளை 7 , வெண்சீர் வெண்டளை 8 , ஒன்றிய வஞ்சித்தளை 9 , வெண்சீர் வெண்டளை 10 , ஒன்றாத வஞ்சித்தளை 11 , கலித்தளை 12 , கலித்தளை 13 , கலித்தளை 14 , கலித்தளை 15 கலித்தளை 16 என்பன நான்கடிகளினும் முறையே வருதலின், பிறதளைகள் யாவும்மயங்கியவாறு. (யா. க. 22 உரை)