கலிப்பா (2)

நேரசை முதல் வரத் தொடுத்தலும், ‘ஏ’ என முடித்தலும் கலிப்பாவிற்குஅணியாம்; நிரைமுதல் வரத் தொடுத்தலும், ஆல் ஓ கொல் என்பன முதலாகமுடித்தலும் பிறிதொரு தன்மைய.தளை பிறழ்ந்துள்ள கலிப்பாவானது கொச்சகச் கலிப்பா என்றும், சிலரால்கொச்சகம் என்றும் கூறப்படும். (அறுவகை. யாப்பு 26, 27)