கலிப்பா (1)

கலி என்ற சொல்லுக்கு எழுச்சி, பொலிவு, விரைவு, ஓசை என்ற பொருள்கள்உள ஆதலின், சீர் பொருள் இசைகளால் எழுச்சியும் பொலிவும் விரைவும் உடையபா கலிப்பா எனப்பட்டது. இது துள்ளலோசை பற்றி முரற்கை எனவும்வழங்கப்படும். இதனை வணிகர் வருணத்தது என்ப. இது துள்ளல் ஓசைத்து. (யா.க. 55 உரை)