துள்ளல் ஓசைத்தாய், நேரீற்று இயற்சீரும் நிரை நடுவாகியவஞ்சியுரிச்சீரும் வாராது, நிரை முதலாகிய வெண்பா உரிச்சீர் மிக்கு,நேரடித்தாய், தன்தளையும் அயல்தளையும் தட்டு வரும்; புறநிலை வாழ்த்து,வாயுறை, அவையடக்கு, செவியுறை என்னும் பொருள்மேல் வாராது, 13 எழுத்துமுதலாக 20 எழுத்து முடிய உயர்ந்த எட்டு நிலமும் பெற்று, அளவடிமிகுத்து வரும் இயல்பிற்று. இக்கலிப்பா ஒத்தாழிசைக்கலி, வெண்கலி,கொச்சகக்கலி என மூவகைத்து. அம்போதரங்க உறுப்புக்களிலும் ஒருசார்அராகத்திலும் நேரீற்றியற்சீர் வரப்பெறும். (யா. க. 78 உரை.)