எடுத்துக்கொண்ட இனவெழுத்து இரண்டாமடி முதற்கண் பெற்றும் இடையிட்டுஎதுகை பெற்றும் பெறாதும் வந்த ஒரு சார் இருசீரடி வஞ்சிப்பாவின்இரண்டடியை உடன் கூட்டி இசை அறாமை அசைத்து ஒலிப்ப எழுத்தும் எதுகையும்பெற்றும் பெறாதும் வந்த ஒலித்தொடர்ச்சியால் கலிப்பா அடியாய்க்கைகலத்தலும், அனுவும் அடியெதுகையும் பொழிப்பெதுகையும் பெற்றும்பெறாதும் வந்த கலிப்பா அடியினைக் கண்டித்து இரண்டாக்கிக் காலஇடையீடும் கடைபற்றியது காகூவும் பட (-இசையெச்சம்) ஒலிப்பத் துள்ளலோசைவழுவித் தூங்கலோசைத்தாய் வஞ்சித்தலும் உடைத்து எனக் கலியும் வஞ்சியும்ஒருங்கு வைக்கப்பட்டன என்ப.‘தாழிரும் பிணர்த்தடக்கைத்தண்கவுள் இழிகடாத்துக்காழ்வரக் கதம்பேணாக்கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின்’என்ற வஞ்சியடிகளை,’தாழிரும் பிணர்த்தடக்கைத் தண்கவுள்இழிகடாத்துக்காழ்வரக் கதம்பேணாக் கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின்’எனக் கலியடிகளாகவும்,‘ஓங்குதிரை வியன்பரப்பின்ஒலிமுந்நீர் வரம்பாகத்தேன்தூங்கு முதிர்சிமையமலைநாறிய வியன்ஞாலத்து’ (மதுரைக். 1-4)என்ற வஞ்சியடிகளை,‘ஓங்குதிரை வியன்பரப்பின் ஒலிமுந்நீர் வரம்பாகத்தேன்தூங்கு முதிர்சிமைய மலைநாறிய வியன்ஞாலத்து’எனக் கலியடிகளாகவும் உரைப்பின் துள்ளலோசை பெற்றவாறு.இனி,‘பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றும்குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்துமுன்னாட்கண்’(யா. வி. பக். 33 உரைமேற்.)என்னும் கலியடிகளைத் துணித்து இவ்விரண்டாக்கி,‘பரூஉத்தடக்கை மதயானைப்பணையெருத்தின் மிசைத்தோன்றும்குரூஉக்கொண்ட மணிப்பூணோய்குறையிரந்து முன்னாட்கண்’எனக் குறளடியாக்கியுரைப்பின், வஞ்சிப்பாவாய்த் தூங்க லோசைபெற்றவாறு. (குறளடி இறுதியில் ஓசை அறுதலின் கால இடையீடு உண்டாம்;வஞ்சியடி யிறுதிக்கண் இசை யெச்சம் தோன்ற அடுத்துப் பிற உறுப்புக்கள்தொடரும்.)இவ்வியைபு பற்றிக் கலியும் வஞ்சியும் ஒருங்கு வைக்கப் பட்டன என்ப.(யா. க. 55 உரை.)