கலிப்பாவில் முச்சீரடி வரப்பெறுதல்

கலிப்பாவில் முச்சீரடி ஒரு செய்யுள் முழுதும் நிறைந்திருத்த லும்உண்டு. அஃதன்றி முதல் இடை கடை என்ற மூன்றிடத் தும் ஓரோ அடியாகவும்இரண்டும் பலவுமாகிய அடிகளாக வும் நிற்கும்.எ-டு : நீர்வரக் கண்கலுழ்ந் தாங்குக்கார்வரக் கண்டநம் காதலர்தேர்வரக் கண்டில மன்னோபீர்வரக் கண்டனம் தோளே!இது முச்சீரடி முழுதும் வந்தது.அரிபரி பறுப்பன சுற்றிஎரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண்உருவ மாலை போலக்குருதிக் கோட்டொடு குடர்வ லந்தன (முல்லைக்.3)1,3 முச்சீரடி (தொல். செய். 70 நச்.)